🚍பேருந்தில் காவலருடன் 🗣வாக்குவாதம் - நடத்துனர் 😞மரணம்

திருச்சியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு 🚌பேருந்து விருத்தாசலம் அருகே வந்தபோது, 👮‍♂காவலராக பணிபுரியும் பழனிவேல் என்பவர் பேருந்தில் ஏறியுள்ளார். இதையடுத்து, பேருந்து நடத்துநர் கோபிநாத், பழனிவேலிடம் 🎟டிக்கெட் எடுக்கும்படி கூறியபோது, காவலர் பழனிவேல் 🗣வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, நடத்துநர் திடீரென 😇மயங்கி விழுந்துள்ளார். பயணிகள் அவரை எழுப்ப முயன்ற போது அவர் உயிரிழந்தது 😳தெரியவந்தது. நடத்துநர் நெஞ்சுவலியால் 😞உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து 👮‍♀காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬