அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?

  |   Coimbatorenews

காய்கறிகளை குழந்தைகள் சாப்பிட மறுப்பார்கள். காய்கறிகளுடன் முட்டையை சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருள்கள் :

அவரைக்காய் - 150 கிராம்

முட்டை - 1

எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

மிளகு தூள் - 1 ஸ்பூன்

செய்முறை :

  • அவரைக்காய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் அவரைக்காய், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.

  • அவரைக்காய் நன்கு வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

  • முட்டை வெந்து பூப்போல உதிரியாக வந்ததும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.

  • சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி....

போட்டோ - http://v.duta.us/cTgiLgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/MjULnQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬