🇮🇳இந்திய அளவில் தமிழகத்தில் தான் பெரிய அளவில் பொதுப் 🚌போக்குவரத்து சேவை-விஜயபாஸ்கர்🎙

✍இளவேனில்🌄

🏛சேலத்தில் 🚌போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 💸பணப் பயன் வழங்கும் விழாவில்🎉 அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அன்பழகன், சரோஜா மற்றும் சேலம் மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்👍. அந்நிகழ்ச்சியில்🎉 பேசிய அவர்🎙, "🚌போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற 👥ஊழியர்களுக்கு 💰ஆயிரத்து 93 கோடி ரூபாய் பணப் பயன் ஒரே தவணையாக வழங்கப்பட்டுள்ளது😯. 22 ஆயிரம் 🚌பேருந்துகள் இயக்கப்பட்டு 👥ஒரு கோடியே 25 லட்சம் பயணிகள் பயன் பெற்று வருகிறார்கள்👏" என்று தெரிவித்த அவர், "🇮🇳இந்திய அளவில் 🏛தமிழகத்தில் தான் பெரிய அளவில் பொதுப் போக்குவரத்து சேவை அரசால் வழங்கப்படுகிறது🤗" என்று பெருமிதம் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர்🎙, 300 புதிய 🔌மின்சாரப் பேருந்துகள் வாங்க ✍ஒப்பந்தம் இன்னும் இரண்டொரு நாட்களில் கையெழுத்து இடப்பட உள்ளது👌 என்றும் 🚌825 மின்சார பேருந்துகள் இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது🎊 என்றும் குறிப்பிட்டார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬