🏝இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 🏅தங்கம் பறிமுதல்👍

✍இளவேனில்🌄

🏅தங்கம் கடத்தப்பட்டு வருவதாக தகவல்📲 வந்த நிலையில், 🏛ராமேஸ்வரம்-🏛மதுரை இடையே மத்திய புலனாய்வு வருவாய் 🤵துறையினர் தீவிர கண்காணிப்பில்👀 ஈடுபட்டனர். நள்ளிரவு ⌚2 மணி அளவில் 🏛சிவகங்கை மாவட்டம், மானாமதுரை - திருப்புவனத்திற்கு இடையே உள்ள டோல்கேட் அருகே சந்தேகத்திற்கு😕 இடமான வகையில் வந்த 🚗காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை👀 செய்தனர். அப்போது காரில் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 🏅7 கிலோ தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை😳 கண்டு பிடித்தனர். அவற்றை பறிமுதல் செய்த புலனாய்வு துறையினர், காரில் இருந்தவர்களை பிடித்து விசாரணை🗣 செய்ததில், அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வேதாளை பகுதியில் இருந்து தங்கத்தை கடத்தி வந்ததாகவும், 👥7 பேரும் சென்னை புதுப்பேட்டை, மதுரை கேகே நகர், தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்😯 என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது⛓ செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், மதுரை மண்டல 🏢அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை🗣 செய்து வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬