கோவையில் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு மின்னணு அபராதம்; நேரடியாக வங்கியில் செலுத்தலாம்

  |   Coimbatorenews

கோவையில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்தில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி கடந்த சில நாட்களாக தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கோவையின் தெற்கு பகுதியான கிணத்துக்கடவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு, இ-சலான்' மூலம் அபராத தொகை கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த முறையில் வாகன ஓட்டிகள் அவர்களுக்கு அனுப்பப்படும் லிங்க்-ஐ பயன்படுத்தி நேரடியாக வங்கியில் கட்டணத்தை மின்னனு முறையில் செலுத்தமுடியும்.

தேவையற்ற கால விரயத்தை தவிர்க்கவும், போக்குவரத்திற்கு இடையூறு செய்வதை தவிர்க்கவும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ஏ.டி.எம்., கார்டு 'ஸ்வைப்' செய்து கட்டணம் பெறப்படுகிறது. ஏ.டி.எம்., கார்டு இல்லை என்றால் அவர்களின் மொபைல் நம்பருக்கு மெசேஜ் மூலம் லிங்க் அனுப்பிவைக்கப்பட்டு அதன் மூலம் அவர்கள் மின்னணு பரிமாற்றம் செய்யலாம். எனினும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலை கவசம் அணியவேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

போட்டோ - http://v.duta.us/yXs1-wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/ssDTSwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬