கோவையில் நாளை பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகள்

  |   Coimbatorenews

கோவையில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள் செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சைக்கிள் போட்டி செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

காரமடை - கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி முன் தொடங்கி பெரியபுத்தூர் வரை சென்று திரும்ப வேண்டும். பள்ளி மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்குகின்றன.

போட்டிகள் 3 பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. 13 வயதுக்குள்பட்ட ( 2006 ஜனவரி 1 க்குப் பின் பிறந்தவர்கள்) மாணவர்கள் 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகள் 10 கிலோ மீட்டர் தூரமும் செல்ல வேண்டும். 15 வயதுக்குள்பட்ட ( 2004 ஜனவரி 1 க்குப் பின் பிறந்தவர்கள்) மாணவர்கள் 20 கிலோ மீட்டரும், மாணவிகள் 15 கிலோ மீட்டரும் செல்ல வேண்டும்....

போட்டோ - http://v.duta.us/bQtqtQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/UhU6VQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬