சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய சக்தி மூலம் 2,400 யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சேமிப்பு

  |   Chennainews

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் உள்ள சோலார் பேனல் மூலம் ஒரு நாளைக்கு 2400 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வேசென்னை கோட்டத்தில் தண்ணீர் மறுசுழற்சி, சோலார் மின்சார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கு சமீபத்தில் பசுமை தொழிற்கட்டிட கூட்டமைப்பின் சான்றிதழைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேலும் பல பசுமைத் திட்டங்களை கொண்டு வந்து தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதைப்போன்று ரயில்நிலையங்களையும் சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு கழிப்பறை அமைப்பது, சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்நிலையங்களில் காலி இடங்களில் மரக்கன்றுகள் நடுதல், புதிய எல்இடி விளக்குகள் பொருத்துவது போன்ற பணிகளை மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள், ரயில் நிலையங்களில் உள்ள அலுவலகங்கள், லிப்டு, எக்ஸ்லேட்டர், ரயில் நிலையங்களில் உள்ள கடைகள், மின்விசிறி, மின்விளக்குகளுக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படுவதால் அவற்றை குறைக்க வேண்டும் என்பதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் 15,148 சதுர மீட்டர் அளவுக்கு 600 கிலோ வாட் அளவுக்கு சோலார் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 2400 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய வருகின்றனர். இதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை சேமிக்கப்படுகிறது. இதனால், மின்கட்டண செலவு 60 சதவீதம் வரை குறைவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. எனவே இது போன்று தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களில் சோலார் கருவிகள் அமைத்து ரயில் நிலையங்களுக்கு தேவைப்படும் மின்சார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இருக்கிறது.

போட்டோ - http://v.duta.us/g7_5ZgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/VUaNzwAA

📲 Get Chennainews on Whatsapp 💬