சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர்பாட்ஷா மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய மனு: ஐகோர்ட் மறுப்பு

  |   Chennainews

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி காதர் பாட்ஷா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆழ்வார்பேட்டை கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் தோண்டும் போது 6 ஐம்பொன் சிலைகள் கிடைத்ததாகவும், அதனை கைப்பற்றிய அப்போதைய சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் சுமார் 6 கோடி ரூபாய்க்கு இந்த சிலைகளை விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து 2 பேர் மீதும் சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும், சிலைகளை விற்ற காவல் ஆய்வாளர் காதர் பாட்ஷா டி.எஸ்.பி- யாகவும், ஏட்டாக இருந்த சுப்புராஜ் ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு விசாரிக்கும் என உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைகடத்தல் பிரிவினர் டிஎஸ்பி காதர் பாட்ஷா, சுப்புராஜ் ஆகியோர் மீது 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதன்பின்னர், டிஎஸ்பி காதர் பாட்ஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல, அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளிவந்தார்....

போட்டோ - http://v.duta.us/GAP-5QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/tBNScAAA

📲 Get Chennainews on Whatsapp 💬