நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு

  |   Chennainews
  • மக்களவை தேர்தல் மூலம் அதிமுக செல்வாக்கு சரிவு * அரசியல் விமர்சகர்கள் கருத்து

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வசந்தகுமார் வெற்றிப்பெற்றதால், அந்த தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திமுக விட்டுக் கொடுத்துள்ளது.

ஆனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அதிமுக போட்டியிட முடிவு செய்து உள்ளது. ஆனால் நாங்குநேரி தொகுதியில் பாஜ போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜ சார்பில், அதிமுக தரப்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே அமமுக, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டது. அதிமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து தற்போது வரை கருத்து ெதரிவிக்கவில்லை. அதே நேரத்தில் 2 தொகுதிகளிலும் ேபாட்டியிடும் அதிமுகவினரிடம் விருப்பமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது....

போட்டோ - http://v.duta.us/NwOtjgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/4A9LrwAA

📲 Get Chennainews on Whatsapp 💬