நடிகர் ⭐மோகன்லால் உள்ளிட்ட 4⃣ பேர் மீது 📜குற்றப்பத்திரிகை

  |   Kollywood

நடிகர் ⭐மோகன்லாலுக்கு சொந்தமான கேரளாவில் உள்ள சிந்தமான வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமான வரித்துறை 💺அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 🐘யானை தந்தங்கள் இருந்ததைக் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் 🔍சோதனை மேற்கொண்டனர். பின்னர், யானை தந்தங்கள் மோகன்லாலுக்கு 🎁பரிசாக கிடைத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் 🎙தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து பவுலோஸ் என்பவர் கேரள 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக கேரளா வனத்துறையினர் தாக்கல் செய்துள்ள 📜குற்றப்பத்திரிகையில், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் நடிகர் மோகன்லால் உள்பட 4⃣ பேர் விதிமீறலில் ஈடுபட்டிருப்பதாக 🎙தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 🎭சூர்யா - மோகன்லால் நடிப்பில் உருவான 🎥'காப்பான்' திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/i_iiHQAA