பிரதமர் மோடியின் ✈அமெரிக்க பயணத்திற்கு கண்டனம்😡 தெரிவிக்கும் காங்கிரஸ் எம்.பி.💻

✍இளவேனில்🌄

✈அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 💺பிரதமர் மோடி, 🏛ஹூஸ்டன் நகரில் 🇮🇳இந்திய 👥வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த 'நலமா மோடி (ஹவுடி மோடி)' நிகழ்ச்சியில்🎉 கலந்து கொண்டார். இதில் அமெரிக்க அதிபர் 🤵டொனால்டு டிரம்பும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி🎙, இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவு பற்றியும் பயங்கரவாதத்திற்கு 😳எதிராக இணைந்து🤝 போரிடுவதன் முக்கியத்துவம் பற்றியும், அமெரிக்க அதிபர் 🤵டிரம்ப் பயங்கரவாதத்தை வேரருப்பதில் உறுதியாக👍 இருப்பதாகவும் அடுத்த முறையும் அவரையே 💺ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கூறினார்🗣. மோடியின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் 👤ஆனந்த் சர்மா கடும் 😡கண்டனம் தெரிவித்து, "நீங்கள் எங்கள் பிரதமராக தான் அமெரிக்கா சென்றிருக்கிறீர்கள்😐. அமெரிக்க அதிபர் 🗳தேர்தலுக்காக பிரச்சாரம்🎙 செய்ய செல்லவில்லை” என்று 💻ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
மேலும், "நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் 🇮🇳இந்திய வெளியுறவு கொள்கையின்படி இன்னொரு நாட்டின் 🗳தேர்தல் விவகாரங்களில் தலையிடுவதில்லை❌என்ற கொள்கையை நீங்கள் மீறிவிட்டீர்கள்🙄. இது 🇮🇳இந்தியாவின் கொள்கைகளை அவமதிப்பதாகும்😨" என்றும் பதிவு செய்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬