பால்கோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது: இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் பேட்டி

  |   Chennainews

சென்னை: இஸ்லாம் மதம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். சென்னை பரங்கிமலை ராணுவ பயிற்சி மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லையில் இந்திய படைகள் உஷார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். காஷ்மீரில் மதத்தின் பெயரில் தீவிரவாதமே பரப்பப்படுகிறது. அதேபோல தீவிரவாத ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரி பயிற்சி மையத்தில் இளம் அதிகாரிகளுக்கான புதிய பிரிவு இன்று தொடங்கப்பட்டது. இளம் அதிகாரிகளுக்கான YTW என்ற புதிய பயிற்சி பிரிவை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தொடங்கி வைத்தார்.

ராணுவ அதிகாரி பயிற்சி மையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட YTW பிரிவு 5 மாதகால பயிற்சியை கொண்டது. இளம் வீரர்களை அதிகாரிகளாக மாற்றுவதற்கான பயிற்சிக்காக YTW பிரிவு தொடங்க திட்டமிட்டுள்ளதாக பிபின் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் நமது நாட்டு ராணுவ வீரர்களிடம் அதிக திறன் உள்ளது எனக் கூறினார். இதையடுத்து பேசிய அவர், இந்திய ராணுவ தாக்குதலில் சேதமடைந்த பால்கோட் தளத்தை பாகிஸ்தான் மீண்டும் பயன்படுத்த தொடங்கியுள்ளது தெரிவித்தார். பால்கோட் தளத்துக்கு பயங்கரவாதிகளை மீண்டும் கொண்டு வந்து பயிற்சி அளிக்கிறது என தகவல் அளித்துள்ளார். குறைந்தபட்சம் 500 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்துக் கொண்டிருக்கிறார்கள் என அவர் கூறினார். பயங்கரவாதிகள் நம்முடைய எல்லைக்குள் நுழையவே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது....

போட்டோ - http://v.duta.us/PwFYAwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/kiMBeQAA

📲 Get Chennainews on Whatsapp 💬