முதல்வர், 15 அமைச்சர்களை தொடர்ந்து சபாநாயகர் தனபால் உகாண்டா செல்கிறார்: அமைச்சர்கள் காமராஜ், ஓஎஸ்.மணியன் வெளிநாடு பயணம்

  |   Chennainews

சென்னை: சர்வதேச பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் இந்த வாரம் உகாண்டா நாட்டிற்கு செல்கிறார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 28ம் தேதி பிரிட்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 10ம் தேதி தான் சென்னை திரும்பினார். அதே போன்று, எட்டு அமைச்சர்களும் சென்றனர். இந்த நிலையில், அமைச்சர்களை போன்றே பேரவை தலைவர் தனபால் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவுள்ளார். கிழக்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில் சர்வதேச அளவிலான பேரவைத் தலைவர்கள் மாநாடு நேற்று தொடங்கி வரும் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலும் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் வரும் 25ம் தேதி புதன்கிழமை உகாண்டா நாட்டிற்கு புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் சட்டப்பேரவை அலுவலக உயர் அதிகாரிகள் குழுவும் செல்கிறது. இந்த மாநாட்டில் என்ன தலைப்பின் கீழ் தனபால் உரை நிகழ்த்தப்போகிறார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை....

போட்டோ - http://v.duta.us/TvfIAQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/6bkHhAAA

📲 Get Chennainews on Whatsapp 💬