📲மொபைல் செயலி மூலம் 👥மக்கள் தொகை கணக்கிடப்படும்👍-அமித்ஷா🎙

✍இளவேனில்🌄

🇮🇳இந்தியாவில் 👥மக்கள் தொகை கணக்கெடுப்பு 📆10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம்😯. அந்த வகையில் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 📆2021ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், 🏛டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி🎉 ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் 👴அமித்ஷா🎙, "👥2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, 📲மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பட உள்ளது. மேலும், காகித கணக்கெடுப்பில் இருந்து 💻டிஜிட்டல் கணக்கெடுப்புக்கு மாறும் முறையாக இது அமையும்👍" என்றும், " கணக்கெடுப்பு துவங்கிய 📆140 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக 📲மொபைல் செயலி மூலமாக மக்கள் தொகை கணக்கெடுப்பட உள்ளது🙂. வீடுவீடாக🏘 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் தங்கள் சொந்த 📲செல்போன் வாயிலாக கணக்கெடுப்பை நடத்த ஊக்குவிக்கப்படுவார்கள்👏" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

image credit : dailythanthi

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬