வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

  |   Chennainews

சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சியானது இன்னும் 3 நாளில் தமிழகத்தை நோக்கி நகரும் என தெரிவித்தார். இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார். குறிப்பாக வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

சென்னையில் வாகனம் மேகமூட்டத்துடன் கணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாயப்பு உள்ளது என தெரிவித்தார். தென் தமிழக கடலோர பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் கடுமையான சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் நாளையும் நாளை மறுதினமும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவக்கோட்டை, பாலக்கோட்டில் 11 செமீ மழை பெய்துள்ளது என கூறினார். போச்சம்பள்ளியில் 9 செமீ, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலங்குடி, தர்மபுரியில் தலா 8 செமீ மழை பதிவாகி உள்ளது என கூறினார்.

போட்டோ - http://v.duta.us/qVAExAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/b0aVxwAA

📲 Get Chennainews on Whatsapp 💬