வெங்காய விலை 3 நாட்களில் குறையும்; தேவைப்பட்டால் அரசே கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்கும்: தமிழக அரசு அறிக்கை

  |   Chennainews

சென்னை: வெங்காய விலை 3 நாட்களில் குறையும் என்று தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நாசிக், ஆந்திராவில் இருந்து வெங்காயம் ஏற்றிய லாரிகள் கோயம்பேடு அங்காடிக்கு வந்துகொண்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மராட்டியம், கர்நாடகத்தில் மழை பெய்ததால் வெங்காயம் தமிழகத்துக்கு வருவது குறைந்து விலை அதிகரித்தது. இதையடுத்து, தேவைப்படும் போது அரசே வெங்காயத்தை வாங்கி குறைந்த விலையில் விற்பனை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயம் வரத்து குறைந்ததால் நாடு முழுவதும் அதன் விலை கிடிகிடுவென அதிகரித்துள்ளது. விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையிலும் டெல்லியில் ஒரு கிலோ 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெங்காயம் அதிகம் விளையும் மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக விளைச்சல் குறைந்ததால் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரையிலும், சென்னையில் ஒரு கிலோ ரூ.60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலையை கட்டுப்படுத்த ஏற்கனவே இருப்பு வைத்திருந்த 56,000 டன் வெங்காயத்தை நாள்தோறும் மத்திய அரசு சந்தைக்கு விநியோகம் செய்து வருகிறது. இது தவிர பல்வேறு நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் விலை அதிகரித்திருப்பது நடுத்தர மக்களை அவதியடைய செய்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் வெங்காய விலை உயர்வை குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் காமராஜ், செல்லூர்ராஜூ மற்றும் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில், அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் வெங்காய விலை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

போட்டோ - http://v.duta.us/JippsAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/2ujrigAA

📲 Get Chennainews on Whatsapp 💬