வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.38.52 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் பழனிசாமி உத்தரவு

  |   Chennainews

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ரூ.38.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி. விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த மழையின் அளவு உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டது. அப்போது அதிகாரிகளுக்கு முதல்வர் பல உத்தரவுகளை பிறப்பித்தார். அதில் குறிப்பிடுவதாவது;

  • மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சிறப்பு கருவிகள் வாங்குவதற்கு ரூ.38.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • வடகிழக்கு பருவமழைக் காலத்தில் உயிர்சேதத்தையும், பொருட் சேதத்தையும் குறைக்க அதிகாரிகள் இணைந்து செயல்பட உத்தரவு.

  • தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும், போதிய மருந்துகள் இருப்பில் வைக்கவும் உத்தரவு....

போட்டோ - http://v.duta.us/40UAqQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/IcVpNwAA

📲 Get Chennainews on Whatsapp 💬