வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

  |   Coimbatorenews

கோவையில் வேலை கிடைக்காத விரக்தியில் குளத்தில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சவுரிபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சஞ்சீவி (வயது 23). இவர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த வருடம் நடந்த விபத்தில் இவர் தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். உடல் நலம் தேறிய பின்னர் சஞ்சீவி தான் வேலை பார்த்த நிறுவனத்துக்கு சென்று வேலை கேட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று சஞ்சீவி வேலை கிடைக்காத விரக்தியில் உக்கடம் பைபாஸ் ரோட்டில் உள்ள வாலாங்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சஞ்சீவியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போட்டோ - http://v.duta.us/xv3mhAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/NVjPhAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬