ஆவின் பால் விலை உயர்வை ரத்து செய்யகோரி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

  |   Chennainews

சென்னை: ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டது. பசும் பாலின் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், எருமை பாலின் விலையை லிட்டருக்கு 6 ரூபாயும் உயர்த்தி தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி கூட்டமைப்பு அறிவித்திருந்தது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.28-லிருந்து ரூ.32 ஆகவும், எருமைப்பால் விலை ரூ.35 லிருந்து ரூ.41 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஆவின் பால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வதாக கடந்த 17ம் தேதி ஆவின் நிறுவனம் அறிவிப்பாணையை வெளியிட்டது. 19ம் தேதியிலிருந்து அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் இந்த விலை உயர்வை எதிர்த்து, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் ஆவின் பாலை மட்டுமே நம்பியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் பால் கிடைத்து வந்தது. இந்த நிலையில் பால் விலையை அரசு திடீரென உயர்த்தியதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை அரசியல் லாபத்துக்காக அரசு நிதியை செலவு செய்யும் அரசியல்வாதிகள், அந்த நிதிச் சுமையை பொதுமக்கள் மீது சுமத்துகின்றனர் என குற்றம் சாட்டியிருந்தார். எனவே ஆவின் பால் உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்....

போட்டோ - http://v.duta.us/8bSv-QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/gUlbvAAA

📲 Get Chennainews on Whatsapp 💬