🏫ஊரகப் பள்ளிகளில் பாதுகாப்புச் சுவர்கள் 🏗கட்ட 💰ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு👍

✍இளவேனில்🌄

ஊரகப்பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய 🏫ஆரம்பப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களுக்கு 🛣250 கிலோமீட்டர் நீளத்துக்கு 💰144 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச் சுவர்கள் மற்றும் வெள்ளத் தடுப்புச் சுவர்கள் 🏗கட்டப்படும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் 🏛சட்டப்பேரவையில் அறிவித்தவாறு🔈 தற்போது தமிழக அரசு அரசாணை📜 வெளியிட்டுள்ளது. அதன்படி "👴மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் இந்தப் பணிகளுக்காக 💰144 கோடியே 50 லட்சம் ரூபாயை ஒதுக்க ✍ஒப்புதல் அளித்துள்ளது. சுற்றுச்சுவர்கள் கட்டுவதன் மூலம் பள்ளிகளுக்குள் அன்னியர் நுழைவதை தடுத்து🚫 மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியும். 👩பெண் குழந்தைகள் 💪பாதுகாப்புடன் 📚படிப்பை தொடர வழி வகுக்கும்👍" என்று அந்த அரசாணையில்📜 குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அனைத்து 🏛மாவட்டங்களிலும் இந்த பணிகளை விரைவாக தொடங்கி🎉 குறித்த நேரத்திற்குள் முடிக்க ஊரக வளர்ச்சித்துறை 🤵இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬