ஒப்பணக்கார வீதியில் தவிர்க்க முடியாத மற்றொரு வியாபார ஸ்தலம் சைனா பஜார்

  |   Coimbatorenews

டவுன்ஹால் ஒப்பணக்கார வீதியில் தவிர்க்க முடியாத மற்றொரு வியாபார ஸ்தலம் சைனா பஜார். கிட்டதட்ட 50 கடைகள் உள்ளன. முன்பு சைனா மொபைல்களுக்கு செம ஃபேமஸான ஏரியா. இப்போதும் மலிவு விலை மொபைல், ஐ-பேடுகள், கம்ப்யூட்டர், டெம்பர் கிளாஸ், இயர் போன், சார்ஜர், பேட்டரி போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மலிவாகக் கிடைக்கும் பகுதி.

இது தவிர, வீட்டுக்குத் தேவையான பிரஸ்கள், பிளாஸ்டிக் பொருள்கள், பேப்பர் கப்கள் போன்ற ஃபேன்ஸி பொருள்களுக்கு தாமஸ் வீதி, சீப்பான ரேட்டில் ரெடிமேட் உடைகள் மற்றும் தையல் உபகரணப் பொருள்களுக்கு உப்புக்கடை சந்து, ஃபர்னிச்சர் பொருள்கள், அச்சகங்களுக்கு வெரைட்டி ஹால் சாலை, பழைய புத்தகங்கள் மற்றும் சீப்பான ரேட்டில் உடைகள், உள்ளாடைகளுக்கு ஈஸ்வரன் கோயில் வீதி, என்.ஹெச் சாலை என்றழைக்கப்படும் நவாவ் ஹக்கீம் சாலை என இவை அனைத்துமே மார்க்கெட் ஏரியாதான்.

என்னடா இது இவ்வளவு பகுதிகளா என்று தலை சுற்றுகிறதா? இந்தப் பகுதிகள் அனைத்தும் டவுன்ஹாலின் ஸ்பெஷலே.

வழக்கறிஞரும், எழுத்தாளருமான முருகவேள், “முதலில் கோவையில் உற்பத்தி செய்யப்படும் டெக்ஸ்டைல்ஸ் மட்டும்தான் இங்கு விற்பனை செய்யப்பட்டு வந்தன. பிறகு, மக்கள் கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க குஜராத் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து டெக்ஸ்டைல்ஸ் வியாபாரத்துக்காக ஏராளமானோர் இங்கு வந்தனர். அதன்பிறகு, நிறைய கடைகள் வந்துவிட்டன. ஆனால், இங்கு உள்ள பல நகைக்கடைகளில் டிசைனர்கள் கிடையாது. இதனால், மக்களின் தேவைக்கேற்ப டிசைன்களெல்லாம் கிடைப்பது கடினம். நகைக் கடைகளில் விற்கப்படும் நகைகளைக் கண்காணிப்பதற்காக எந்த அமைப்பும் இல்லை. இது ஒரு பெரிய பிரச்னை. பார்க்கிங் வசதியும் குறைவு” என்றார்....

போட்டோ - http://v.duta.us/cEVEPAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/y21mlQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬