கோவையிலிருந்து குடகுமலை-க்கு சுற்றுலா போலாம் வாங்க...

  |   Coimbatorenews

எங்காவது காபிக் கொட்டைக் கடைகளைத் தாண்டும்போது, உங்கள் நாசித் துவாரங்களுக்கு ஒரு மயக்கம் கிடைக்குமே... கூர்க் எனும் குடகுமலைக்குள் நுழைந்ததுமே அந்த மயக்கத்தை அனுபவிக்கலாம்.

எந்நேரமும் இங்கு காபி வாசம் காற்றில் மிதந்துகொண்டே இருக்கும். கர்நாடக மாநிலத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் அழகான மடிக்கேரி, குடகின் தலைநகரம். மலைக் கிராமங்கள் எல்லாவற்றிலும் காபிச் செடிகள் பதனிட முடியாது. கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டருக்கு மேல் 1,750 மீட்டர் உயரத்துக்குள் இருக்கும் மலை வாச ஸ்தலங்களில் மட்டுமே காபிச் செடிகளைப் பதனிட முடியும். இங்கு எந்நேரமும் 20 டிகிரி குளிர் சில்லிட்டுக் கொண்டே இருக்கும்.

அடர்ந்த காட்டைப் போலவே மரங்களும், காபிச் செடிகளும், மலைகளும் நிறைந்த குடகு மலையில், விலங்குகள் பற்றிய பயம் வேண்டாம். ஆனால், அதிகாலை நேரத்தில் விதவிதமான பறவைகளை ரகசியமாகப் பார்க்கலாம். சாகசம், த்ரில்லிங் எதுவுமற்ற குடகுமலைப் பயணம், அமைதியை விரும்புபவர்களுக்கு மட்டும் அழகான சாய்ஸ். குடகுமலையில் இருந்து ஒரு மணி நேரம் பயணித்தால், 50 கி.மீ தாண்டி தலைக்காவிரி வருகிறது. இங்குள்ள காவேரியம்மன் கோயில் குளத்தில் காசு எறிந்து வேண்டினால், கேட்டது கைகூடும் என்பது ஐதீகம். இங்கிருந்து 60 கி.மீ தொலைவில் உள்ளது துபேர் யானைகள் கேம்ப். நமக்குப் பிடித்த யானையில் காட்டுக்குள் சவாரி செய்யலாம். மின்சாரம் இல்லாத துபேர் காட்டில் காட்டேஜில் தங்கலாம். சவாரிக்கு, ஆளுக்கு 1,000 ரூபாய். பக்கத்தில் இருக்கும் அபே அருவியும், இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற இடம்....

போட்டோ - http://v.duta.us/p6U0bAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/LNVLkgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬