சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 கிணறு, குளங்களை காணவில்லை: சினிமா பாணியில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

  |   Chennainews

சென்னை : சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 27 கிணறு, குளங்களை காணவில்லை என்றும், அதனை கண்டுபிடித்து தரக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 27 நீர்நிலைகளும் எங்கே என்பது குறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வரும் 26ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

27 கிணறு, குளங்களை காணவில்லை என மனு

சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கத்தில் இருந்த தட்டான்கேணி, தீர்த்தன்கேணி, உப்பு கேணி, தாழியார் மானிய குளம், ராவுத்தர் கேணி உள்ளிட்ட 27 நீர்நிலைகள் காணாமல் போனதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் நீர்நிலைகளை பழைய நிலைக்கே மீட்டெடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், நீர்நிலைகளை கண்டறிந்து பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் காணாமல் போன நீர்நிலைகளை கண்டறிய உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்....

போட்டோ - http://v.duta.us/M5TIPgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/zLHT3AAA

📲 Get Chennainews on Whatsapp 💬