சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தாதது ஏன்?: அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

  |   Chennainews

சென்னை: தமிழகம் முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.கட்டாய ஹெல்மட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மோட்டார் வாகன புதிய சட்ட விதிகளை அமல்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.பின்னர் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பொது நல வழக்கு தொடர்ந்த மனுதாரர் இதுவரை அவரது தரப்பிலிருந்து என்ன விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார் என்று மனுதாரர் வக்கீலிடம் கேள்வி எழுப்பியதுடன். மனுதாரர் அவரது தரப்பு விழிப்புணர்வு குறித்து தெரிவிக்கவில்லை என்றால் இந்த வழக்கிலிருந்து மனுதாரரை நீக்கிவிட்டு நீதிமன்றமே வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நீதிபதிகள் அளித்த உத்தரவு வருமாறு: ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். சட்டத்தை அமல்படுத்துவது அதிகாரிகளுடைய கடமை. அரசின் நிர்வாக பணிகளை நீதிமன்றங்கள் நடத்த முடியாது. கட்டாய ஹெல்மெட் சட்டம் என்பது அரசு பிறப்பித்த சட்டம். அது உரிய முறையில் அமல்படுத்தப்படுகிறதா என்பதை மட்டுமே நீதிமன்றம் விசாரிக்க முடியும். கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காவல்துறை தவிர போக்குவரத்து துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது....

போட்டோ - http://v.duta.us/yQ9cdgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/SXdpmQAA

📲 Get Chennainews on Whatsapp 💬