ஞாயிற்றுக்கிழமை பச்சாபாளையம் தடுப்பணையை சீமைக்கும் களப்பணி; வாருங்கள் இணைவோம் கோவையின் வளம் காக்க

  |   Coimbatorenews

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பேரூர் அருகே, சிறுவாணி சாலையில் உள்ள பச்சாபாளையம் தடுப்பணையை சீரமைக்கும் களப்பணிகள் நடக்கிறது..

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் குளங்களை சீரமைத்து அதன் நீர்வழிப்பாதைகளை சீரமைக்கும் களப்பணிகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. சமீபத்தில் வெள்ளலூர் குளத்தை முன்மாதியான குளமாக மாற்றும் பொருட்டு குளக்கரையில் மியாவாக்கி முறையில் அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே மூலிகை வனமும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது..

சமீபத்தில் பெய்த பருவமழையின் காரணமாக வெள்ளலூர் குளத்தில் தண்ணீர் ததும்பி நிற்பது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்துள்ளது.. கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தன்னர்வலர்களின் சீரிய முயற்சியால் நீண்ட ஆண்டுகளுக்கு இந்த வெள்ளலூர் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது..

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்துவருவதால் நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள நீர்வழிப்பாதைகளை சீரமைப்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த வகையில் கோவை சிறுவாணி சாலையில், பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமத்தில் உள்ள பச்சாபாளையம் குளம் தடுப்பணை உள்ளது.. அந்த பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த தடுப்பணையை தூய்மை செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.....

போட்டோ - http://v.duta.us/5cYCegAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/K7iPiwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬