மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்மழை எதிரொலி; ஆழியாறு அணை 100 அடியை தொட்டது

  |   Coimbatorenews

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழையினால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. குரங்கு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆழியார் அணைக்கு 2000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில் தற்போது நீர்மட்டம் 100 அடியை தொட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஆழியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது.நேற்று மாலை, 100 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் வினாடிக்கு, 2,000 கனஅடி நீர் வரத்து இருக்கும் நிலையில், 123 கனஅடி நீர் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.

ஆழியாறு நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து மலை பெய்யும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது....

போட்டோ - http://v.duta.us/XzYl7AAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/RUM2cQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬