இஸ்ரோவிற்கு ஆதரவாக தாங்கள் இருப்போம்: பாகிஸ்தானை மீம்ஸ் மூலம் தாக்கிய தென்னிந்திய நடிகர்களின் ரசிகர்கள்

  |   Chennainews

சென்னை: முழுக்க இந்தியாவிலேயே தயாரான சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று அதிகாலை நிலவில் தரையிறங்கும் என இந்தியாவே காத்திருந்தது. ஆனால், தரையிறங்க 2.1 கிலோமீட்டர் தொலைவு இருந்தபோது, அதிலிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்க முடியாமல் போனதால் சோகத்தில் இருந்த இஸ்ரோ தலைவர் சிவன் மற்றும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் லேண்டரை தரையிறக்கும் முயற்சி தோல்வி அடைந்ததை விமர்சித்து ட்விட்டரில் கருத்துக்களை தெரிவித்தனர். இன்று காலை முதல் ட்விட்டரில் இஸ்ரோவை கிண்டல் செய்து மீம்ஸ்களை பாகிஸ்தானியர்கள் பதிவிட்டனர். இந்நிலையில், விமர்சித்த பாகிஸ்தானுக்கு இந்தியர்கள் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. அதில் பெரும்பங்காற்றியவர்கள் விஜய் - அஜித் பேன்ஸ்தான். விஜய் அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதுதான் வழக்கம்.

ஆனால், இன்று இரண்டு தரப்பினரும் ஒன்று சேர்ந்து பாகிஸ்தானை கலாய்த்து தள்ளிவிட்டனர். இதனால் பாகிஸ்தான் தரப்புக்கு எதிராக மீம்ஸ்கள் பறந்தன. தென்னிந்திய நடிகர்களின் ரசிகர்கள் பலரும் இதில் சேர்ந்து கொண்டனர். சூர்யா ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு மீம்ஸ்களை பதிவிட்டனர். இஸ்ரோவிற்கு ஆதரவாக தாங்கள் இருப்போம் என பலரும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

போட்டோ - http://v.duta.us/izDlYgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/EMuM5AAA

📲 Get Chennainews on Whatsapp 💬