🏢இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் 👥விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி உரை🎙

✍இளவேனில்🌄

🏛கர்நாடகாவின் பெங்களூரூவில் உள்ள 🏢இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் பிரதமர் மோடி இன்று காலை ⌚8 மணியளவில் உரையாற்றினார். அப்போது அவர்🎙, "🚀சந்திரயான்-2 திட்டத்துக்காக தூக்கமின்றி பல 📆நாட்கள் நமது விஞ்ஞானிகள் உழைத்துள்ளனர்💪. அவர்களின் உழைப்பு ஈடு இணையற்றது👏. இரவு பகலாக உழைத்த இஸ்ரோ 🤵விஞ்ஞானிகளால் 🇮🇳இந்தியா பெருமை கொள்கிறது. நமது விண்வெளி திட்டத்தில் வெற்றிக்கான🎊 புதிய உச்சங்களை நாம் அடையவுள்ளோம்🎉" என்று பிரதமர் மோடி 👥விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தினார். "நாடு உங்களுடன் உள்ளது. தேச வளர்ச்சிக்காக⏫ அளப்பரிய பங்காற்றிய தனித்தன்மை வாய்ந்தவர்கள் நீங்கள்👍" என்றும் பாராட்டினார்👏. மேலும் பேசிய அவர்🎙, "அதிவிரைவில் புதிய விடியல் மற்றும் சிறந்த நாள் நமக்கு வரும். அறிவியலில் தோல்வி என்பதே கிடையாது🚫. அதில் பரிசோதனைகள் மற்றும் முயற்சிகளே உள்ளன😯" என்று கூறினார். இவரது உரையை🎙 கேட்ட 👩பெண் விஞ்ஞானிகள் சிலர் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர்😭.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬