🏛கடலூரில் 🍾மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த 🤵ஆசிரியர் பணியிடை நீக்கம்🚫

✍இளவேனில்🌄

🏛கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள 🏛அரசு உதவி பெறும் 🏫மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு 👥மாணவர்களுக்கு 📚பாடம் நடத்தும் ஆசிரியர் 🤵தாமஸ் நேற்று முன்தினம் தள்ளாடியபடியே வகுப்பறைக்கு பாடம் நடத்த சென்றார்😳. இதைப்பார்த்த மாணவர்கள் அவர் 🍾மதுபோதையில் இருந்ததை அறிந்து கடும் அதிர்ச்சி😱 அடைந்து, 🏫பள்ளி 💺முதல்வரிடம் புகார் செய்தனர். இதனையடுத்து, கடலூர் புதுநகர் 👮போலீசார் விரைந்து வந்து போதையில் இருந்த ஆசிரியர் 🤵தாமசை அழைத்து சென்று அவரை 😡கடுமையாக எச்சரித்து அனுப்பினர். ஆசிரியர் தினத்தன்று நடந்த இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் 🏛மாவட்ட முதன்மை கல்வி 🤵அதிகாரி ஆறுமுகம் அதிர்ச்சி😨 அடைந்தார். மேலும் இச்சம்பவம் பற்றி விசாரணை🗣 நடத்தி உடனடியாக அறிக்கை📜 தருமாறு 🏛கடலூர் 📚கல்வி மாவட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார்⚖. அதன்பேரில் 🏛கடலூர் 📚கல்வி மாவட்ட அதிகாரி 🤵சுந்தரமூர்த்தி விசாரணை நடத்தி முதன்மை கல்வி அதிகாரியிடம் அறிக்கையை சமர்ப்பித்தார்👍. அதன்படி, ஆசிரியர் 🍾குடிபோதையில் வந்தது உறுதியானதை😱 அடுத்து அவரை பணியிடை நீக்கம்🚫 செய்ய பள்ளி முதல்வருக்கு முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம் பரிந்துரை😐 செய்தார். இதையடுத்து ஆசிரியர் 🤵தாமசை பணியிடை நீக்கம்🚫 செய்து பள்ளி முதல்வர் 💺அருள்நாதன் நடவடிக்கை மேற்கொண்டார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬