கண்டுகொள்ளப்படாத மருதமலை; அனைவரும் அறியச்செய்த சாண்டோ சின்னப்பா தேவர்

  |   Coimbatorenews

கோவை மாவட்ட வனக் கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, காரமடை, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை என ஏழு வனச்சரகங்கள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையை அடுத்துள்ள இந்த வனச்சரகங்களை ஒட்டியுள்ள இக்குறிப்பிட்டுள்ள மலைகள் மற்றும் அவற்றைச் சார்ந்துள்ள கிராமங்களுக்கு விவசாயமே வாழ்வாதாரமாக விளங்குகிறது.

இவற்றில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி ஆகிய வனச்சரகங்களில் முக்கிய பகுதிகளில் நடக்கும் அத்துமீறல்கள், புதிய கட்டுமானங்கள், உருவாகும் பெரும் குடியிருப்புகள், கல்வி மற்றும் வியாபார நிறுவனங்களின் ஆதிக்கம், ஆன்மீக மையங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளின் வியாபாரம், அதனால் அதைத் தேடி வரும் மக்கள் வெள்ளத்தால் எந்த அளவு காட்டு யானைகள் எந்த அளவு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன; சலனப்பட்டு எப்படியெல்லாம் சுற்றித் திரிகின்றன. தனக்குள் தன்னெழுச்சியாய் கிளம்பும் அதிர்வுகளால் எதிர்ப்படுவோரையும் அழித்து, தானும் அழிந்து சாகின்றன என்பதையே கண்டு கொண்டுள்ளோம்.

இதில் போளுவாம்பட்டி வனச் சரகத்தில் வரும் மருதமலையும் முக்கியமான ஒன்று. இந்த மலைக் கோயிலுக்கு எனக்கு தெரிந்து 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரியதொரு கட்டுமானங்கள் எதுவும் கிடையாது. படிக்கட்டுகள் கூட சரிவர இல்லை. பச்சை பசேல் என்று காணப்படும் மருதமலை படிக்கட்டுகளில் தான்தோன்றி விநாயகரை வணங்கிப் படியேறும் முன்னால், மூன்று விதமான கற்களை தூரத்தில் காணலாம். கோயில் நகைகளை மூன்று திருடர்கள் திருடிச் சென்றதாகவும், அவர்களை குதிரையின் மேல் சென்று துரத்தி முருகன் பிடித்ததாகவும், அந்த கள்வர்களை, காலத்துக்கும் கல்லாய்ப் போகுமாறு முருகன் சபித்ததாகவும் அந்தக் காலத்தில் ஒரு கதை சொல்வார்கள்....

போட்டோ - http://v.duta.us/ap783wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/addIagAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬