கோமியத்தை 💉மருத்துவப் பொருளாக அறிவிக்க🔈 நடவடிக்கை எடுக்கும் அமைச்சர்😐

✍இளவேனில்🌄

🏛கோவை 🏥ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதி நவீன புற்று நோய் சிகிச்சைக் கருவிகளை தொடங்கி🎉 வைத்தார், மத்திய சுகாதாரதுறை இணை அமைச்சர் 👴அஸ்வினிகுமார் செளபே. அதன் பின்னர் பேசிய அவர்🎙, "கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு சர்வதேச அளவிலான சிகிச்சைகள் இந்தியாவில் கிடைக்கிறது. 2025க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க 🏛மத்திய சுகாதார துறை முயற்சி மேற்கொண்டுள்ளது" என்று கூறினார். இதனையடுத்து 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "🇮🇳நாடு முழுவதும் புதிதாக 🏢75 மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படவுள்ளது👍. அதன் மூலம் அடுத்த 📆5 ஆண்டுகளில் 1 லட்சம் 💉மருத்துவக் கல்வி இடங்கள் உருவாக்கப்படும்😯. கோமியத்தை மருத்துவப் பொருளாக அறிவிக்கும்🔈 வகையில் ஆய்வுகள்👀 நடைபெற்று வருவதோடு, யோகா, சித்தா, யுனானி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது😌" என்று தெரிவித்தார்📣. மேலும், சேலம், மதுரை, தஞ்சை 💉மருத்துவக் 🏪கல்லூரிகளுக்கு 💸நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உட்கட்டமைப்பு மேம்படுத்தபட்ட பின்னர் அவற்றில் மருத்துவக் கல்வி இடங்கள் அதிகரிக்கப்படும்⏫ என்றும் அவர் கூறினார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬