கருத்து கேட்பு கூட்டத்தில் புதிய மின் இணைப்பு கட்டணத்தை உயர்த்த பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு

  |   Chennainews
  • மின்கட்டணம் உயரும் அபாயம் என தொழிற்சங்க நிர்வாகி குற்றச்சாட்டு

சென்னை : தமிழகத்தில் புதிய மின் இணைப்பிற்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நேற்று கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தியது. தமிழக மின்வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. தற்போது அதன் ஒருபகுதியாக புதிய மின் இணைப்பிற்கான பல்வகை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கருத்துக்கேட்புக்கூட்டம் நேற்று மயிலாப்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் நடத்தப்பட்டது. இதில், மின்வாரிய உயர் அதிகாரிகள், பல்வேறு பகுதிகளை சேர்ந்த சமூக நல அமைப்புகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். அவர்கள் வாரியத்தின் மின்கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது: புதிய மின்இணைப்பிற்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்தான கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அதற்காக கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது....

போட்டோ - http://v.duta.us/8Pt_FAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/C5YD_AAA

📲 Get Chennainews on Whatsapp 💬