குறவர் சமூகத்தில் மாற்றம் விதைத்த ஓர் நல்லாசிரியர்

  |   Coimbatorenews

அருகில் இருந்து கற்பிப்பவர் ஆசிரியர். தான் இல்லாதபோதும் கற்றலை நிகழ்த்துபவர் சிறந்த ஆசிரியர்.

2016-ம் ஆண்டு ஜூலை மாதம். கோவை, காளம்பாளையைம் அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். எங்கள் பள்ளிக்கு சைல்டு ஹெல்ப் லைனில் இருந்து அழைப்பு வந்தது. பேசியவர்கள், 'கோவை ரயில் நிலையத்தில் ஒரு பள்ளிச்சிறுவன் நின்று கொண்டிருந்தான். நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. காளம்பாளையம் என்ற வார்த்தை மட்டும் அவன் வாயிலிருந்து வந்தது. அதனால் சுற்றுவட்டாரத்தில் இருந்த 3 காளம்பாளைய பள்ளிகளையும் அழைத்துப்பேசினோம். உங்கள் பள்ளிதான் கடைசி'' என்றனர்.

அப்போது நான் தலைமை ஆசிரியர் அறையில் இருந்ததால், போனை வாங்கிப் பேசினேன். அடையாளம் கேட்டதற்கு அவர்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. உடனே ஸ்பீக்கர் போடச் சொல்லி, ''என்ன கண்ணு பண்ற? எங்க இருக்க, உனக்கு என்ன வேணும்'' என்று கேட்டேன். 'கலைவாணி மிஸ்!' என்று என் பெயரைச் சொல்லி கதறினான் அந்தச் சிறுவன்.

சிறுவனின் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லை. வீட்டில் பணப் பிரச்சினை, நானும் சாகிறேன்; நீயும் செத்துத்தொலை என்று கூறியிருக்கிறார் அம்மா. கோபித்துக்கொண்டு மதுரையில் இருக்கும் பாட்டி வீட்டுக்குச் செல்லலாம் என்று ரயில் நிலையம் சென்றிருக்கிறான் அச்சிறுவன். ஆனால் எங்கிருந்து எப்படிப் போக வேண்டும் என்று தெரியவில்லை. தடுமாறி நின்றவனின் வாழ்க்கை, தடம் மாறிப்போக அத்தனை வழிகள். அடையாளம் அற்று நின்ற அச்சிறுவனைத் தேற்ற, ஊக்குவிக்க ஒரு கருவியாய் என் ஆசிரியப் பணி உதவியதை என்னுடைய 26 வருட ஆசிரியர் வாழ்க்கையின் ஆகச் சிறந்த தருணமாக எண்ணுகிறேன்'' என்று நெகிழ்கிறார் இந்த அத்தியாய அன்பாசிரியர் கலைவாணி....

போட்டோ - http://v.duta.us/utVrfAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/-WhV-wAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬