கோவையின் நுழைவாயில் கருமத்தம்பட்டி - ஓர் சிறப்பு பார்வை

  |   Coimbatorenews

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,162 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கருமத்தாம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 62% . இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கருமத்தம்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் .

கருமத்தம்பட்டி பேரூராட்சியில் கருமத்தம்பட்டி, கருமத்தம்பட்டிபுதூர், சோமனூர், தண்ணீர் பந்தல், ஆத்துப்பாளையம், எலச்சிபாளையம், சேடபாளையம், செகுடந்தாழி, சுப்பராம்புதூர், கருவேலங்காடு, ராயர்பாளையம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு புதன்கிழமையும் சோமனூரில் பிரதான வாரச் சந்தை நடக்கிறது.

1845ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் கருமத்தம்பட்டி கோவை மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்தது.

இப்படியும் ஒரு உணவகம் :

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு ரூ. 10-க்கு 5 இட்லியை வழங்கி வருகிறார் ஒரு தனியார் ஓட்டல் உரிமையாளர். பள்ளி சீருடையுடன் எந்த குழந்தை டிபன் பாக்ஸ் எடுத்து சென்றாலும் அங்கு இப்படி குறைந்த விலையில் உணவு வழங்கப்படுவது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. எதை பார்த்தாலும் விற்று காசாக்க பார்க்கும் இந்த வியாபார உலகில், இது போன்றும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் தங்கள் சேவையை நல்லவர்கள் யாரும் சொல்லிகாட்டி விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. அது பிறர் மூலமாகவே நமக்கு தெரிய வருகிறது....

போட்டோ - http://v.duta.us/Qu2-DAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/iQKhdAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬