கோவை திருச்சி சாலையில் மேம்பாலப்பணியில் மண் சரிவு; வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது

  |   Coimbatorenews

கோவை திருச்சி சாலையில், சுங்கம் ஒலம்பஸ் பகுதியிலிருந்து ராமநாதபுரம் அல்வேர்னியா பள்ளி வரை மேம்பாலம் காட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனிடையே நேற்று திடீரென மண் சரிந்ததால் பாதுகாப்பு கருதி வாழுங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

சுமார் 200 கோடி செலவில் 3 கி.மீ நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு திட்டம் தீட்டப்பட்டு பணிகள் படுவேகமாக நடந்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடந்துவரும் இந்த பணிகளில் தூண்கள் அமைப்பதற்கு பள்ளம் தோண்டும் பணிகள் நடந்து வருகின்றன.

மேம்பாலத்திற்கான தூண்கள் அமைப்பதற்கு 5 மீட்டர் அளவிற்கு பள்ளம் தோண்டப்படும், இருப்பினும் இரண்டு புறமும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தது . நேற்று ஒலம்பஸ் பகுதியில் தோண்டிய பள்ளத்தில் மண் சரிந்தாள் பாதுகாப்பு கருதி அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.. இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

இந்த சரிவு உடனே சரிசெய்யப்பட்டு மீண்டும் இப்பாதையில் விரைவில் வாகனங்கள்அனுமதிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போட்டோ - http://v.duta.us/BlQFqAEA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/28Ab_wAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬