🚀'சந்திரயான்-2' விண்கலம் நிலவில் ஆய்வை தொடர முடியும்👍-இஸ்ரோ அறிவிப்பு📣

✍இளவேனில்🌄

🚀சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர், 🌕நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தூரம் இருந்த நிலையில், கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்தது😟. அதன் சிக்னல்களை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து😒 வருகின்றனர். இதற்கிடையில் 🚀சந்திரயான் 2 விண்கலத்தின் அடுத்தகட்ட நிலை என்ன என்பது குறித்த தகவலை இஸ்ரோ விளக்கி உள்ளது😐. அதன்படி, "விக்ரம் லேண்டர் மற்றம் பிரக்யான் ரோவர் உடனான தொடர்பு 5 சதவீதம் மட்டுமே இழந்தள்ளது😯. மீதமுள்ள 95 சதவீதம் தொடர்பு அப்படியே தான் உள்ளது👍. அது தான் சந்திரயான் 2 ஆர்பிட்டர். இது நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக🎉 இயங்கி வருகிறது. அது 🌕நிலவிற்கு அருகில் உள்ள 📷புகைப்படங்களை எடுத்து அனுப்பும். இதன் மூலம் நிலவில் ஆய்வை👀 தொடர முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. மேலும், "ஆர்பிட்டர் அடுத்த 📆ஓராண்டிற்கு 🌕நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்தும், நிலவில் தரையிறங்கும் முயற்சியில் ஈடுபட்ட லேண்டரின் நிலை குறித்தும் ஆர்பிட்டர் புகைப்படங்களை எடுத்து அனுப்பும்🙂. லேண்டரின் உட்புறம் உள்ள ரோவர் பிரக்யானின் வாழ்நாள் 📆14 நாட்கள் மட்டுமே" என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது🗣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬