சென்னை 🏛உயர் நீதிமன்ற வளாகத்தில் 🤵நீதிபதியின் 💻மடிக்கணினி திருட்டு😨

✍இளவேனில்🌄

🏛திருவள்ளுர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் சென்னை சைதாப்பேட்டை 🤵நீதிபதிகள் 🏘குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்றைய 📆தினம் தனது 🚗காரில் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தின் நீதிபதியை அவர் சந்திக்க👀 வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, 🚗காரில் ஓட்டுனர் 👨மதன் இருக்க, நீதிபதியை சந்தித்துவிட்டு திரும்பி வந்த 🏛திருவள்ளுர் நீதிமன்ற நடுவர் பின் சீட்டில் 👜பை மட்டும் இருக்க அதிலிருந்து 💻லேப்டாப் இல்லாததால் ஓட்டுநரிடம் விசாரித்துள்ளார்🗣. அதற்கு, ஓட்டுநர் மதன், தனக்கும் தெரியவில்லை😳 எனக் கூற யாராவது திருடிச் சென்றிருக்கலாம் சந்தேகம்😕 எழுந்துள்ளது. இது குறித்து நீதிபதியின் சார்பில் 🏛உயர்நீதிமன்ற 👮காவல் நிலையத்தில் 💻லேப்டாப் திருடப்பட்டதாக😱 அளிக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் 👮போலீசார் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬