🏯சபரிமலை கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக தனிச்சட்டம்😯-🏛கேரள அரசு தகவல்🔈

✍இளவேனில்🌄

சபரிமலை கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக தனிச்சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கேரள அரசு 🏛உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.⛰சபரிமலை கோவில் தொடர்பாக ரேவதி நாள் 👤பி.ராமவர்ம ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில் கடந்த மாதம் 📆27ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது கேரள அரசின் வழக்கறிஞர் இந்த தகவலை வாய்மொழியாக🗣 தெரிவித்ததையடுத்து, அதனை 🤵நீதிபதி பதிவு செய்துகொண்டார். இந்நிலையில் 📰செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 🏛கேரள அரசு வழக்கறிஞர் 🤵பிரகாஷ்🎙, "சபரிமலை கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக தனிச்சட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சட்டம் ⛰சபரிமலை கோவிலுக்கு மட்டுமன்றி திருவாங்கூர் தேவசம் போர்டின் கீழ் வரும் அனைத்து 🏯கோவில்களுக்கும் பொருந்தும்😯. சட்டம் தொடர்பான வரைவு 📄மசோதா இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இந்த சட்டம் ⛰சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதை பாதிக்காது" என்று கூறினார். இதற்கிடையே, 🙏தேவஸ்வம் போர்ட்டின் கீழ் 150-க்கும் மேற்பட்ட 🏯கோவில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬