'ஜாக்டோ ஜியோ 💪போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம்❌'-செங்கோட்டையன்🎙

✍இளவேனில்🌄

🏛தமிழகத்தில் அரசு 🏫பள்ளி மாணவர்களுக்கு ✍நீட் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு 🏛ஈரோட்டில் 📆2 நாள் பயிற்சி ⛺முகாம் நடைபெறுகிறது. இன்றும் நாளையும் 2 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி ⛺முகாமில் மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்கள் வீதம் 👥320 பேர் பங்கேற்றுள்ளனர்😐. திண்டல் தனியார் 🏢கல்லூரி வளாகத்தில் நடைபெறும் இந்த முகாமினை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்🎉. பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்🎙, "✍நீட் விலக்கு🚫 பெற வேண்டும் என்பது தான் 🏛தமிழக அரசின் இலக்கு, அது வரை அரசு 🏫பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும்😯. மேலும், ✈பின்லாந்து நாட்டில் 👥மாணவர்கள் படிக்கும் போதே பிராக்டிகல் பயிற்சி 👏வழங்கப்படுகிறது. 🏛தமிழகத்திலும் அது போன்ற 📚பாட திட்டத்தை கொண்டு வந்து 9ம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும்👍" என்று தெரிவித்தார்🔈. தொடர்ந்து பேசிய அவர்🎙, "ஜாக்டோ ஜியோ 💪போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம்❌" என்று 🙏வேண்டுகோள் விடுத்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬