தங்கத்தின் விலை நேற்று சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.29,368-க்கு விற்பனை

  |   Chennainews

சென்னை: சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.29,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.3,671- க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது. கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை 30 ஆயிரத்தை நெருங்கி, பின்னர் அதையும் தாண்டி விற்பனையானது. இந்த நிலையில், தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 664 ரூபாய் சரிந்த நிலையில், இன்று 104 ரூபாய் உயர்ந்துள்ளது. நேற்று ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.83 ரூபாய் விலை குறைந்து ரூ.3,658- க்கு விற்பனையானது. ஒரு சவரன் 664 ரூபாய் வீழ்ச்சியடைந்து ரூ.29,264 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி வெள்ளியில் விலை கிராமுக்கு ரூ. 50 காசுகள் விலை குறைந்து, ரூ.51.30 காசுகளுக்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வந்தது. செப்டம்பர் 5 ம் தேதி, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 28 பைசா ஏற்றம் கண்டு 71.84 ஆக உயர்ந்தது. சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதாக கூறியதை அடுத்து முதலீட்டாளர்களின் நம்பிக்கை புத்துயிர் பெற்றுள்ளது. எனவே தான், ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டது. இன்று இந்திய ரூபாய் மதிப்பு மேலும், 12 பைசா உயர்ந்து டாலருக்கு எதிராக 71.72 என்ற அளவில் இருந்தது. இந்த நிலையில், நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்திருந்ததால் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது என்று வணிகர்கள் தரப்பில் தெரிவித்திருந்தனர். ஆனால் இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் மீண்டும் சிறிது மாற்றம் காணப்பட்டதால், தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றங்கள் காணப்பட்டு வருகின்றன.

போட்டோ - http://v.duta.us/H-Ja0wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/L-DurAAA

📲 Get Chennainews on Whatsapp 💬