தமிழகம் முழுவதும் 12ம் தேதி காலாண்டுத் தேர்வு துவக்கம் : 25 லட்சம் பேர் எழுதுகின்றனர்

  |   Chennainews

சென்னை: அரசு பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 12ம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இதில் மேற்கண்ட வகுப்புகளை சேர்ந்த 25 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். தமிழக அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தற்போது 25 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த வகுப்புகள் தவிர கீழ் வகுப்புகளுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த பாடங்கள் தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு முதல் பருவத் தேர்வுகள் தொடங்க உள்ளன. உயர் வகுப்புகளான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ-மாணவியருக்கு காலாண்டுத் தேர்வுக்கான பாடத்திட்டம் முடிந்து, வரும் 12ம் தேதி முதல் காலாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளன.

பத்தாம் வகுப்புக்கான காலாண்டுத் தேர்வுகள் 12ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும். பிளஸ் 1 வகுப்புக்கான தேர்வு 12ம் தேதி தொடங்கி 23ம் தேதி முடியும். மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணிக்கு தேர்வுகள் முடியும். பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வுகள் காலை 10மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடியும். மேற்கண்ட வகுப்புகளுக்கான தேர்வுகள் அனைத்தும் இரண்டரை மணி நேரம் தான் நடக்கும்.

போட்டோ - http://v.duta.us/BLdL0wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/4vWmyQAA

📲 Get Chennainews on Whatsapp 💬