⛵படகு கவிழ்ந்ததில் மாயமான 🐠4 மீனவர்களை தேடும்👀 பணி தீவிரம்👍

✍இளவேனில்🌄

🏛கடலூரில் புதிய ⛵படகு வாங்கிக் கொண்டு 🏛ராமேஸ்வரம் திரும்பும் வழியில் புதுகை மாவட்ட 🏛கோட்டைப்பட்டினம் 🌊கடல் பகுதியில் படகு கவிழ்ந்தது😳. இதில், படகில் இருந்த 🐠மீனவர்கள் 10 பேரும் மாயமாகினர். அவர்களில் 👥2 பேரை தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீட்டு மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்😯. பின்னர், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே, ⛽டீசல் கேனை பிடித்து கொண்டு உயிருக்கு போராடி😨 கொண்டிருந்த 4 பேர் மீட்கப்பட்டனர்😌. இந்நிலையில், மற்ற 🐠4 மீனவர்களை தேடியும் கிடைக்கவில்லை😟. இதனை தொடர்ந்து, மீண்டும் நேற்று காலை 🌊கடலோர 👮காவல்படையினர், மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ⛵2 படகுகளில் சென்று தேடி👀 வருகின்றனர்👍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬