பின்னடைவு தற்காலிகமானதே..புதிய சாதனைகளை படைப்போம்: இஸ்ரோவிற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

  |   Chennainews

சென்னை: ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவியது. நிலவின் மேற்பரப்பை சுற்றியவாறு ஆய்வு செய்யும் ஆர்பிட்டரும், தென் துருவத்தில் தரை இறங்க லேண்டர் கலனும், நிலவின் தரை பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ரோவர் கலனும் வடிவமைக்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுவட்டப்பாதையில் சரியாக சேர்ந்த விக்ரம் லேண்டர் விண்கலம், இன்று அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது.

நிலவை நோக்கி பயணித்த லேண்டர், தரையிறங்க வெறும் 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, அதிலிருந்து சிக்னல் கிடைக்காமல் போனது. விக்ரம் லேண்டரிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று, இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கும் வகையிலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். தலைவர்களின் வாழ்த்துகள் பின்வருமாறு..

மு.க.ஸ்டாலின்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தமது ட்விட்டர் பக்கத்தில் பிதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோடிக்கணக்கான மக்களை விண்வெளி நோக்கிப் பார்க்கவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றல் மீது நம்பிக்கை வைக்கவும் ஊக்கமளித்த இஸ்ரோ குழுவினருக்கு நன்றி. முன்பைவிட நம்மை ஒருபடி முன்னே கொண்டு சென்றதற்காக நம்முடைய விஞ்ஞானிகள் குறித்துப் பெருமை கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்....

போட்டோ - http://v.duta.us/5Mob4QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/Nvvf7QAA

📲 Get Chennainews on Whatsapp 💬