பல் 💉மருத்துவ 📚படிப்புக்கான நீட் கட்-ஆப் குறைப்பு⏬

✍இளவேனில்🌄

🇮🇳இந்திய பல் மருத்துவ கவுன்சில் 📚பி.டி.எஸ். படிப்புக்கான ✍நீட் கட்-ஆப்ஐ குறைத்துள்ளது⏬. பி.டி.எஸ் படிப்புக்கான நீட் கட்-ஆப்ஐ குறைப்பதன் மூலம் கூடுதல் மாணவர்கள் தகுதி பெறுவார்கள்😌 என்று கூறப்படுகிறது. பல் மருத்துவ கவுன்சில் பொதுவாக ஒவ்வொரு பிரிவிலும் 10 சதவீத மதிப்பெண்களை குறைத்துள்ளது. குறிப்பாக ஓ.பி.சி, எஸ்டி, மற்றும் எஸ்.சி. பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை 40 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும், ♿மாற்றுத்திறனாளி 👥மாணவர்களுக்கு 45 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாகவும் குறைத்துள்ளது😯. மேலும், பல் மருத்துவ 📚படிப்புக்கான ✍நீட் கட்-ஆப் 🔢மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது 📆2019-2020 கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும்👍 என்று கவுன்சில் அறிவித்துள்ளது📣 குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬