மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் 🏛12 மாவட்ட மக்களுக்கு 🌊வெள்ள ⚠அபாய எச்சரிக்கை😨

✍இளவேனில்🌄

🏛கர்நாடகா மாநில 💦நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் ☔கனமழை காரணமாக, அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன😯. அங்குள்ள கே.எஸ்.ஆர் அணையில் தற்போதைய நிலவரப்படி அணைக்கு 53,016 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால்😳, பாதுகாப்பு💪 கருதி 52,807 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது😐. இதேபோல், கபினி அணைக்கு 24321 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், 25000 கன அடி 💦தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மொத்தமாக இரு அணைகளில் இருந்தும் ⌚விநாடிக்கு 77807 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது😱. இதனிடையே, 🌊காவிரி ஆற்றில் 72 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்துகொண்டிருப்பதால், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 🏛12 மாவட்டங்களில் 🌊வெள்ள ⚠அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தாழ்வான பகுதிகளில் உள்ள 👥மக்கள் வெளியேறி, 💪பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது😨. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் உள்ளன👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬