மதுவிலை அதிகமாக இருந்தாலும் டாஸ்மாக்கில் கூட்டம் குறையவில்லை பால் விலை உயர்வை எதிர்த்து வழக்கா?

  |   Chennainews

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுகா இருங்கல் கிராமத்தை சேர்ந்த வி.முனிகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பசுவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 28 லிருந்து 32 ஆகவும், எருமை பால் விலை 35 லிருந்து 41 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக மக்களில் பெரும்பாலானோர் ஆவின் பாலைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் மற்ற தனியார் நிறுவனங்களின் பால் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, பால் விலையை உயர்த்தி வெளியிடப்பட்ட ஆகஸ்ட் 17ம் தேதி வெளிவந்த அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘டாஸ்மாக்கில் மது விலையை எவ்வளவு உயர்த்தினாலும் கூட்டம் குறைவதில்லை.

அந்தவிலை உயர்வை எதிர்த்து யாரும் கேள்வி கேட்பதில்லை. டாஸ்மாக் கடைகளில் பாருங்கள் எவ்வளவு பேர் விலையைப்பற்றி கவலைப்படாமல் மதுபானங்களை வாங்குகிறார்கள். டாஸ்மாக் கடைகளுக்கு இளைஞர்கள் வராமல் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. ஆனால் விவசாயிகளின் பிரச்னைக்காக ஒரு பக்கம் போராட்டம் நடத்தும் நிலையில், விவசாயிகளுக்காக பால்விலையை அரசு உயர்த்தினால் வழக்கு தொடர்கிறீர்கள். விவசாயம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதித்து எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. எந்த ஆய்ைவயும் செய்யாமல் உடனடியாக வழக்கு ெதாடர வந்துள்ளீர்கள்’’ என்று, சரமாரி கேள்வி எழுப்பினர். அப்போது, வழக்கை வாபஸ் வாங்குவதாக மனுதாரரின் வக்கீல் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

போட்டோ - http://v.duta.us/J5Yv6gAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/7C4u-wAA

📲 Get Chennainews on Whatsapp 💬