ரயில்வே பணி தேர்வில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் தருவதற்கு எதிர்ப்பு: திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்

  |   Chennainews

சென்னை: சென்னையில் ரயில்வே அலுவலகம் முன்பு தி.மு.க. எம்.பி கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ரயில்வே பணி தேர்வில் இந்தி மொழிக்கு முக்கியத்துவம் தருவதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, கலாநிதி வீராசாமி, சண்முகம் பி.வில்சன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் திரளாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு நிறுவனமான ரயில்வேத்துறை ஊழியர்களுக்கு இடையே நடத்தப்படக்கூடிய துறைசார்ந்த போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத அனுமதி இல்லை என்றும், ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனை கண்டிக்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகத்திற்கு அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்தியை திணிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் அதனை அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் ரயில்வே மேலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவையும் அளிக்க உள்ளனர். இதற்கு முன்னதாக, ரயில்வே துறையில் அலுவல் மொழியாக ஆங்கிலம் மற்றும் இந்தி இருக்க வேண்டும் என தென்னக ரயில்வே மேலாளர், ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்....

போட்டோ - http://v.duta.us/WMyV5QAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/HdaMLgAA

📲 Get Chennainews on Whatsapp 💬