✈லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கழிவுநீர் மறுசுழற்சி மையத்தை பார்வையிட்டார்👀 தமிழக 💺முதல்வர்👍

✍இளவேனில்🌄

✈வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் பிற 💸முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 🏛தமிழக முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி ✈லாஸ் ஏஞ்சலிஸ் சென்றடைந்த 💺முதலமைச்சருக்கு, விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு💐 அளித்தனர். பின்னர் அங்குள்ள அனாஹெய்ம் என்ற இடத்திற்கு சென்ற 💺முதல்வர், கழிவு நீரை மறு சுழற்சி செய்யும் நிலையத்தை பார்வையிட்டார்👀. அப்போது 🏘வீடுகளில் இருந்து கழிவுநீரை மறுசுழற்சி செய்து சுத்தமாக்கி மீண்டும் அதனை பயன்படுத்தும் முறை மற்றும் தொழில்நுட்பம் குறித்து அந்த அந்த நிலையத்தின் 🤵அதிகாரிகள் முதலமைச்சருக்கு விளக்கினார்கள்🗣. வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரை பலகட்டங்களாக சுத்திகரித்து, வீடுகளின் 🚽கழிவறை பயன்பாடு மற்றும் 🌾விவசாயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்துவது குறித்து விளக்கமளித்தனர்😳. இந்த மையத்தில் ⌚ஒரு நிமிடத்தில் 4 ஆயிரம் கேலன் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது😐. மேலும் 1 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் 💦தண்ணீரை சேகரிக்கும் வகையில் தொட்டியும் அமைக்கப்பட்டுள்ளது😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬