40 அடியாக குறைந்த சிறுவாணி அணை; 4-ம் நாளாக நீரை வெளியேற்றும் கேரளா அரசு

  |   Coimbatorenews

மேற்குதொடச்சி மலைப்பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக நல்ல மழைபெய்து வருகிறது, இதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது, இதனால் சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதன் மூலம் சிறுவாணி அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கேரளா நீர் பாசன துறை தண்ணீரை தொடர்ந்து வெளியேற்றி வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

இந்த ஆண்டு ஆக., 13ல் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 10 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. கடந்த, 2ம் தேதி நீர் மட்டம், 42.21 அடியாக இருந்தது. 3ம் தேதி அணை பகுதியில், 280 மி.மீ., 4ம் தேதி 180 மி.மீ., 5ம் தேதி 208 மி.மீ., நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 67 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

சிறுவாணி அணை கேரளா வனப்பகுதியில் அமைந்துள்ளதால் கேரளா அரசு வனவிலங்குகளுக்காக தண்ணீரை திறந்து வருகிறது. இது குறித்து தமிழக அதிகாரிகள் கேரளா அரசிடம் பேச தவறினால் கோவைக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது....

போட்டோ - http://v.duta.us/8hshuwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/3K3f5gAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬