🇮🇳இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் விமானி 👩அனுப்ரியா🎉

✍இளவேனில்🌄

🏛ஒடிசா மாநிலம் மலகன்கிரி பகுதியைச் சேர்ந்தவர் 👩அனுபிரியா மதுமிதா லக்ரா. பழங்குடியின பிரிவை சேர்ந்த இவருக்கு பைலட்டாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது🙂. இதனால் 🏛அரசின் ✈விமான பயிற்சி மையத்தில் சேர்ந்து பைலட் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் 👩அனுபிரியா ✈இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தை 📆இம்மாதம் இயக்கவுள்ளார்🎉. இதன்மூலம் இவர் 🇮🇳இந்தியாவில் முதன்முறையாக ✈விமானத்தை இயக்க உள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையைப்😀 பெற உள்ளார். இதுகுறித்து கருத்து🗣 தெரிவித்துள்ள 🏛ஒடிசா முதல்வர் 💺நவீன் பட்நாயக், "👩அனுபிரியாவின் சாதனை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக😍 உள்ளது. அவர் மற்ற பெண்களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாகத் திகழ்வார்👍" என்று வாழ்த்து💐 கூறியுள்ளார். மேலும், இது குறித்து அனுப்ரியா தாயார், "எங்கள் மகளின் பயிற்சிக்கு 🏦வங்கி 💸கடன் மற்றும் 👥உறவினர்களிடமிருந்து கடன் வாங்கி பணம் செலுத்தினோம்😯. தற்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த உயர்வு⏫ எங்களுக்கு மகிழ்ச்சியை😌 தந்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் 👩பெண் பிள்ளைகளின் கனவை நனவாக்க வேண்டும்🙂" என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬